அனைத்து பேமெண்ட்களுக்கும் Google Pay பயன்படுத்தும் கோடிக்கணக்கான இந்தியர்களுடன் இணைந்திடுங்கள். Google Pay என்பது Google வழங்குகின்ற எளிய, பாதுகாப்பான பேமெண்ட் ஆப்ஸ். நண்பர்களைப் பரிந்துரைக்கலாம், ஆஃபர்கள் பெறலாம், பணம் செலுத்தும்போது ரிவார்டுகள் பெறலாம்.
உங்கள் பேங்க்கில் பதிவான மொபைல் எண்ணைப் பயன்படுத்தி இதில் பேங்க் அக்கவுண்ட்டை இணைத்து ஆப்ஸைப் பயன்படுத்தலாம்.
UPI பேமெண்ட் செய்ய பேங்க் அக்கவுண்ட் விவரங்களுக்குப் பதிலாக இந்தத் தனிப்பட்ட UPI ஐடி பயன்படுத்தலாம்.
UPI PIN, உங்கள் UPI ஐடியை உருவாக்கும்போது நீங்கள் அமைக்க வேண்டிய 4 அல்லது 6 இலக்க எண். உங்கள் பின்னைப் பகிர வேண்டாம்.
+ உங்கள் பேங்க் மற்றும் Googleளில் இருந்து பல அடுக்குப் பாதுகாப்பு உங்கள் பணம் உங்கள் பேங்க் அக்கவுண்ட்டில் பாதுகாப்பாக வைத்திருக்கப்படும். உங்கள் அக்கவுண்ட்டில் இருந்து செய்யப்படும் பணப் பரிமாற்றங்கள் உங்கள் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்*. மோசடியையும் ஹேக்கிங்கையும் கண்டறிய உதவும் உலகத்தரமான பாதுகாப்பு அமைப்பு உங்கள் பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கும். உங்கள் பேமெண்ட் தகவல்களைப் பாதுகாக்க உங்கள் பேங்க்குடன் இணைந்து பணியாற்றுகிறோம்.
ஒவ்வொரு பணப் பரிமாற்றமும் உங்கள் UPI பின் மூலம் பாதுகாக்கப்பட்டிருக்கும். மேலும், சாதனத்தைப் பூட்டுவதன் மூலம் (உங்கள் கைரேகை போன்றவற்றால்) உங்கள் அக்கவுண்ட்டைப் பாதுகாக்கலாம்.
*இந்தியாவில் உள்ள, BHIM UPIயை ஆதரிக்கின்ற அனைத்து பேங்க்குகளின் அக்கவுண்ட்டுகளையும் Google Payயில் இணைக்கலாம்.
+ DTH, பிராட்பேண்ட், மின்சாரம், FASTag, LPG பில்கள் போன்றவற்றிற்குப் பணம் செலுத்தலாம் பில்லர் கணக்குகளை ஒருமுறை இணைத்தால் போதும், அதன்பின் பணம் செலுத்த நாங்களே நினைவூட்டுவோம், ஒரு சில தட்டல்களால் பில்களுக்குப் பணம் செலுத்திவிடலாம். Google Pay நாடு முழுவதும் உள்ள பல்வேறு பில்லர்களுடன் செயல்படுகிறது.
+ சமீபத்திய பிரீபெய்டு ரீசார்ஜ்களைக் கண்டறிந்து மொபைலுக்கு எளிதாக ரீசார்ஜ் செய்யலாம் கூடுதல் கட்டணங்கள் ஏதுமின்றி எளிதாக ரீசார்ஜ் செய்யலாம்.
+ உங்கள் பேங்க் அக்கவுண்ட் பேலன்ஸைப் பார்க்கலாம் ATMமிற்குச் செல்லாமலேயே எப்போது வேண்டுமானாலும் உங்கள் பேங்க் பேலன்ஸை எளிதாகவும் விரைவாகவும் பார்க்கலாம்.
+ ரிவார்டுகளைப் பெறலாம் நண்பர்களைப் பரிந்துரைக்கலாம், ஆஃபர்களைப் பெறலாம், பணம் செலுத்தும்போது உங்கள் பேங்க் அக்கவுண்ட்டில் கேஷ் ரிவார்டுகளைப் பெறலாம்.
+ QR குறியீட்டுப் பேமெண்ட்டுகள் கடைகளிலும் வணிகர்களிடமும் QR குறியீடு ஸ்கேனர் மூலம் பணம் செலுத்தலாம்.
+ டிக்கெட் முன்பதிவு, ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் உணவு ஆர்டர் செய்யலாம் Google Payயிலிருந்தோ கூட்டாளரின் இணையதளங்கள்/ஆப்ஸிலிருந்தோ (Zomato, redBus, MakeMyTrip போன்றவை) உங்களுக்குப் பிடித்த உணவை ஆர்டர் செய்யலாம் / பயண முன்பதிவு செய்யலாம்.
+ உங்கள் டெபிட்/கிரெடிட் கார்டுகள் மூலம் விரைவான, பாதுகாப்பான பேமெண்ட்டுகளைச் செய்யலாம் Google Pay ஆப்ஸில் உங்கள் டெபிட்/கிரெடிட் கார்டுகளை இணைத்து** இவற்றுக்குப் பயன்படுத்தலாம்: - ஆன்லைன் பேமெண்ட்ஸ் (மொபைல் ரீசார்ஜ்கள், ஆன்லைன் ஆப்ஸ் தொடர்பான பேமெண்ட்ஸ்) - ஆஃப்லைன் பேமெண்ட்ஸ் (கடைகளில் உள்ள NFC டெர்மினல்களில் உங்கள் மொபைலை லேசாகத் தட்டுவதன் மூலம் பேமெண்ட்ஸ்)
**பேங்க் வழங்குநர்கள் மற்றும் கார்டு நெட்வொர்க் வழங்குநர்களிடையே இந்தச் சேவை படிப்படியாக வெளியிடப்பட்டு வருகிறது.
+ 24 கேரட் தங்கம் வாங்கலாம், விற்கலாம், ரிவார்டாகப் பெறலாம் MMTC-PAMP நிர்ணயிக்கும் விலைகளில் தங்கத்தைப் பாதுகாப்பாக வர்த்தகம் செய்யலாம். Google Payயில் உள்ள உங்கள் தங்க லாக்கரில் தங்கம் பாதுகாப்பாக டெபாசிட் செய்யப்படும் அல்லது தங்க நாணயங்களாக உங்கள் வீட்டிற்கே டெலிவரி செய்யப்படும். புதிது! நீங்கள் இப்போது Google Pay ரிவார்டுகளாகத் தங்கத்தைப் பெறலாம்.
+ UPI மூலம் உங்கள் பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து எந்தவொரு பேங்க் அக்கவுண்ட்டிற்க்கும் (Google Payயில் இல்லாதவர்களுக்கும்) நேரடியாகப் பணம் அனுப்பலாம் NPCI (BHIM UPI) பயன்படுத்தி Google Payயில் எளிதாகவும் பாதுகாப்பாகவும் பணப் பரிமாற்றம் செய்யலாம்.
+ கடன் வழங்குகிறது - கடன் வழங்குநர்கள்: DMI Finance - திருப்பிச் செலுத்துவதற்கான கால அளவு: 3-48 மாதங்கள் - அதிகபட்ச ஆண்டுச் சதவீத விகிதம் (Annual Percentage Rate - APR): 34% - செயலாக்கக் கட்டணம்: கடன் தொகையில் 1.5-2.5% உதாரணம்: ₹1,00,000 கடன் தொகைக்கு 12 மாதங்கள் தவணைக் காலம், 2% செயலாக்கக் கட்டணம், 15% வட்டி என்றால், கடன் தொகையில் செயலாக்கக் கட்டணமான ₹2000 பிடித்தம் செய்யப்பட்டு ₹98,000 வழங்கப்படும். அதற்கான வட்டி ₹8310 என்பதால் பயனர் ₹1,08,310 திருப்பிச் செலுத்துவார்.
புதுப்பிக்கப்பட்டது:
4 ஆக., 2025
Finance
தரவுப் பாதுகாப்பு
arrow_forward
டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
இருப்பிடம், தனிப்பட்ட தகவல், மேலும் 8 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்
விவரங்களைக் காட்டு
மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்
phone_androidஃபோன்
laptopChromebook
tablet_androidடேப்லெட்
4.3
10.9மி கருத்துகள்
5
4
3
2
1
S A ISRAVEL S A ISRAVEL 987
பொருத்தமற்றது எனக் கொடியிடும்
7 ஆகஸ்ட், 2025
மிக அருமை சூப்பர்
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 2 பேர் குறித்துள்ளார்கள்
murugesan c
பொருத்தமற்றது எனக் கொடியிடும்
8 ஆகஸ்ட், 2025
good
Siva Kumar
பொருத்தமற்றது எனக் கொடியிடும்
30 ஜூலை, 2025
நான் கரண்ட் பில் கட்டினேன் எனது கார்டிலிருந்து பணம் பெறப்பட்டது பில் தோல்வி அடைந்தது பணம் இன்னும் திரும்பப் பெறவில்லை இரண்டு நாட்கள் பிறகும் எந்த நடவடிக்கையும் இன்னும் எடுக்கவில்லை பணம் இல்லாததால் கரண்ட் பில் கட்ட முடியாத சூழ்நிலையில் நான் தவிக்கிறேன் ஆன்லைனில் கரண்ட் பில் கட்டும்படி சொல்கிறார்கள் ஆனால் இந்த சிக்கலை யார் சமாளிப்பது இதற்கு என்னதான் வழி இரண்டு நாட்கள் ஆகியும் இன்னும் எனக்கு பணம் வர திரும்பி வரவில்லை
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 9 பேர் குறித்துள்ளார்கள்
புதிய அம்சங்கள்
We're giving the app a fresh new look. Enjoy the latest features and offers, from Groups experiences to convenient card payments!