Nexus (Tamil)

Manjul Publishing
ਈ-ਕਿਤਾਬ
966
ਪੰਨੇ

ਇਸ ਈ-ਕਿਤਾਬ ਬਾਰੇ

‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை தொகுத்து வழங்கும் ‘சிறப்பாக விற்பனையாகும் புத்தகங்கள்’ பட்டியலில் முதலிடம் பிடித்த ‘சேப்பியன்ஸ்’ நூலின் படைப்பாசிரியர், இந்நூலில், தகவல் பரிமாற்ற அமைப்புமுறைகள் எவ்வாறு நம்முடைய உலகத்தைக் கட்டமைத்து, பிறகு அதைச் சீர்குலைத்தன என்பது பற்றிய புரட்சிகரமான கதையை விவரிக்கிறார். கதைகள் நம்மை ஒன்றிணைத்தன! புத்தகங்கள் நம்முடைய யோசனைகளைப் பரப்பின - நம்முடைய கட்டுக்கதைகளையும்கூட! இணையம் வரம்பில்லா அறிவுக்கான உறுதியளித்தது! படிமுறைத் தீர்வு நம்முடைய இரகசியங்களைத் தெரிந்து கொண்டு, நமக்கிடையே பகைமையைத் தூண்டிவிட்டன! செயற்கை நுண்ணறிவு நம்மை என்ன பாடுபடுத்தப் போகிறதோ! நாம் இந்தக் கணத்திற்கு எப்படி வந்து சேர்ந்தோம் என்பது பற்றியும், நாம் பிழைத்திருக்கவும் தழைத்தோங்கவும் மேற்கொண்டாக வேண்டிய அவசரத் தேர்ந்தெடுப்புகள் பற்றியுமான விறுவிறுப்பூட்டும் விவரிப்பே இந்த ‘நெக்சஸ்’. ‘சேப்பியன்ஸ்’ நூலைப் பற்றிப் பிரபல பத்திரிகைகள் “சுவாரசியமாகவும், ஆர்வத்தைக் கிளறுவதாகவும் இருக்கிறது.” – பராக் ஒபாமா “என் மனம் கவர்ந்த எழுத்தாளர்கள் மற்றும் சிந்தனையாளர்களில் ஒருவர்.” – நேட்டலி போர்ட்மேன் “உங்கள் மூளையில் படிந்துள்ள சிலந்திவலைகளைத் துடைத்தெறிகிறது; சக்தியையும் தெளிவையும் வெளிப்படுத்துகிறது.” – ‘சன்டே டைம்ஸ்’ “நம்முடைய இனத்தையும் நம்முடைய உலகத்தையும் நான் பார்க்கும் விதத்தை இது அடியோடு மாற்றியது.” – ‘த கார்டியன்’

ਲੇਖਕ ਬਾਰੇ

முனைவர் யுவால் நோவா ஹராரி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலிருந்து வரலாற்றில் முனைவர் பட்டம் பெற்றவர். அவர் இப்போது ஜெரூசலம் ஹீப்ரூ பல்கலைகழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். ‘உலக வரலாறு’ குறித்து அவர் தனித்துவமான ஆய்வுகள் நடத்தி வருகிறார். அவருடைய ஆய்வுகள், பின்வரும் பரந்த கேள்விகளுக்கு விடை காணுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன: வரலாற்றுக்கும் உயிரியலுக்கும் இடையேயான உறவு என்ன? வரலாற்றில் நியாயம் இருக்கிறதா? வரலாற்றின் ஊடாக மக்கள் அதிக மகிழ்ச்சி அடைந்தனரா? ஹராரி நடத்துகின்ற ‘மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு’ என்ற தலைப்புக் கொண்ட இணையவழிப் பயிற்சி வகுப்பில் 65, 000க்கும் அதிகமானோர் பங்கு கொண்டு பயின்று வருகின்றனர். ஹோமோ டியஸ் என்ற இந்நூல் உலகம் நெடுகிலும் வெற்றிகரமாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. உலக அளவில் முப்பது மொழிகளில் இது பிரசுரிக்கப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டில் பேராசிரியர் ஹராரிக்குப் பொலோன்ஸ்கி விருது வழங்கப்பட்டது.

ਇਸ ਈ-ਕਿਤਾਬ ਨੂੰ ਰੇਟ ਕਰੋ

ਆਪਣੇ ਵਿਚਾਰ ਦੱਸੋ

ਪੜ੍ਹਨ ਸੰਬੰਧੀ ਜਾਣਕਾਰੀ

ਸਮਾਰਟਫ਼ੋਨ ਅਤੇ ਟੈਬਲੈੱਟ
Google Play Books ਐਪ ਨੂੰ Android ਅਤੇ iPad/iPhone ਲਈ ਸਥਾਪਤ ਕਰੋ। ਇਹ ਤੁਹਾਡੇ ਖਾਤੇ ਨਾਲ ਸਵੈਚਲਿਤ ਤੌਰ 'ਤੇ ਸਿੰਕ ਕਰਦੀ ਹੈ ਅਤੇ ਤੁਹਾਨੂੰ ਕਿਤੋਂ ਵੀ ਆਨਲਾਈਨ ਜਾਂ ਆਫ਼ਲਾਈਨ ਪੜ੍ਹਨ ਦਿੰਦੀ ਹੈ।
ਲੈਪਟਾਪ ਅਤੇ ਕੰਪਿਊਟਰ
ਤੁਸੀਂ ਆਪਣੇ ਕੰਪਿਊਟਰ ਦਾ ਵੈੱਬ ਬ੍ਰਾਊਜ਼ਰ ਵਰਤਦੇ ਹੋਏ Google Play 'ਤੇ ਖਰੀਦੀਆਂ ਗਈਆਂ ਆਡੀਓ-ਕਿਤਾਬਾਂ ਸੁਣ ਸਕਦੇ ਹੋ।
eReaders ਅਤੇ ਹੋਰ ਡੀਵਾਈਸਾਂ
e-ink ਡੀਵਾਈਸਾਂ 'ਤੇ ਪੜ੍ਹਨ ਲਈ ਜਿਵੇਂ Kobo eReaders, ਤੁਹਾਨੂੰ ਫ਼ਾਈਲ ਡਾਊਨਲੋਡ ਕਰਨ ਅਤੇ ਇਸਨੂੰ ਆਪਣੇ ਡੀਵਾਈਸ 'ਤੇ ਟ੍ਰਾਂਸਫਰ ਕਰਨ ਦੀ ਲੋੜ ਹੋਵੇਗੀ। ਸਮਰਥਿਤ eReaders 'ਤੇ ਫ਼ਾਈਲਾਂ ਟ੍ਰਾਂਸਫਰ ਕਰਨ ਲਈ ਵੇਰਵੇ ਸਹਿਤ ਮਦਦ ਕੇਂਦਰ ਹਿਦਾਇਤਾਂ ਦੀ ਪਾਲਣਾ ਕਰੋ।